தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா? கண்டுபிடிப்பது எப்படி?செனா நாடுகளில் சதம் அடித்த இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனைபெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா 5-ஆவது இடம்!இளையராஜா, கமல்ஹாசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தாயாரின் உடல் ஹரித்வாரில் தகனம்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தாயாரின் உடல் ஹரித்வாரில் தகனம் செய்யப்பட்டது குறித்து...

Yogi Adityanath Teary-Eyed As Mother Is Cremated At Haridwar's Chandi Ghat

யோகி ஆதித்யநாத் தாயாரின் உடல் ஹரித்வாரில் தகனம்.

Updated On :

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தாயாரின் உடல் ஹரித்வாரில் தகனம் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி (91), உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். இதையடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை ஹரித்வாரில் உள்ள சண்டி காட்டில் நடைபெற்றன.

இறுதிச் சடங்கிற்காக உடல் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக, யோகி ஆதித்யநாத் தனது தாயாரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் உ.பி. முதல்வரும் அவரது குடும்பத்தினரும் பௌரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள தங்களது பூர்வீக இல்லத்திலிருந்து, தாயாரின் உடலை ஹரித்வாரில் உள்ள சண்டி காட் மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, அவரது தம்பி இறுதிச் சடங்குகளைச் செய்து சிதைக்குத் தீ மூட்டினார். அஞ்சலி செலுத்துவதற்காக 'நமாமி கங்கை காட்' என்று அழைக்கப்படும் சண்டி காட்டில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தர பிரதேச மூத்த அமைச்சர் சஞ்சய் நிஷாத், இரு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உயர் அதிகாரிகள், பல்வேறு ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Summary

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath struggled to hold back tears on Saturday as his mother, Savitri Devi, was cremated in Haridwar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.