வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவு: அமித் ஷா இரங்கல்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி...

Amit Shah condoles death of UP CM Yogi Adityanath's mother

அமித் ஷா - பிடிஐ

Updated On :

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தாயின் இழப்பு என்பது வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்தத் துயரமான நேரத்தில், யோகிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி (91) உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.

பஞ்சூர் கிராம மக்கள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், சாவித்திரி தேவி காலை 10.45 மணியளவில் காலமானதாகத் தெரிவித்தனர். உள்ளூர் நிர்வாகம் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகப் பவுரி கர்வால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்வேஷ் பன்வார் தெரிவித்துள்ளார்.

சாவித்திரி தேவி நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அவரால் அடையாளம் காண முடிந்ததாகவும் பஞ்சூர் கிராம சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Summary

Union Home Minister Amit Shah has condoled the death of Uttar Pradesh Chief Minister Yogi Adityanath's mother, Savitri Devi, who passed away in her native village in Uttarakhand's Pauri Garhwal district on Friday. She was 91.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.