மெட்டா அலுவலகத்தில் காங்கிரஸ் தாக்குதல்! குண்டர்களின் கட்சி என பாஜக விமர்சனம்!
காங்கிரஸின் அராஜக அரசியல் பற்றி பாஜக விமர்சனம்..

மெட்டா அலுவலகம் நொறுக்கப்பட்ட காட்சி - TNIE
ஹைதராபாத் மெட்டா அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் தாக்குதல் நடத்திய நிலையில், காங்கிரஸ் ஒரு குண்டர்களின் கட்சி என்று பாஜக விமர்சித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மெட்டா அலுவலகத்திற்குள் நுழைந்த தெலங்கானா இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், மாநிலத் தலைவர் ஜக்கிடி சிவச்சரண ரெட்டி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் உதய்பானு சிப் மற்றும் தேசியப் பொறுப்பாளர் மணீஷ் சர்மா ஆகியோரின் சமூக ஊடகக் கணக்குகள் மீது மெட்டா நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்து, அலுவலகத்திற்குள் இருந்த பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கி முழக்கங்களை எழுப்பினர்.
தங்கள் கணக்குகள் மற்றும் பதிவுகள் மீதான தடைகளை ஏழு நாள்களுக்குள் நீக்காவிட்டால், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என மெட்டா நிறுவனத்திற்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைக் கண்டித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஒரு குண்டர்களின் கட்சி. இந்திய இளைஞர் காங்கிரஸின் குண்டர்கள் ஹைதராபாத்தில் உள்ள மெட்டா அலுவலகத்தைச் சேதப்படுத்தியதுடன், அதைச் சமூக ஊடகங்களிலும் பகிரங்கமாகக் காட்டிக்கொள்கிறார்கள். அதேபோன்று மும்பை மெட்டா அலுவலகத்திலும் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.
அதேபோன்று, தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இளைஞர் காங்கிரஸ் அந்த நிகழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து, மேலாடை இன்றி போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தியாவை அவமதித்துவிட்டனர்.
தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களைச் சேதப்படுத்துவது தான் இதுதான் காங்கிரஸ் மாடல். காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது தான் இந்தியா பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது.
வளர்ச்சியை நம்பும் ஒவ்வொரு இந்தியரும் காங்கிரஸின் இந்த வன்முறைச் செயல்களை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


