தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா? கண்டுபிடிப்பது எப்படி?செனா நாடுகளில் சதம் அடித்த இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனைபெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா 5-ஆவது இடம்!இளையராஜா, கமல்ஹாசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்புவேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!

தாதா சாகேப் பால்கே! இந்தியாவின் உயரிய விருதைப் பெற்றாரா டெய்லர் ஸ்விஃப்ட்?

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றதாக வெளியான செய்திகள் குறித்து...

Taylor Swift has won an Indian award

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் - Instagram | Taylor swift

Updated On :

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதைப் பெற்றிருப்பது பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் சாதனைப் புரிந்தவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவரால் தாதா சாகேப் பால்கே எனும் உயரிய விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான இந்த விருதை நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் எனும் பெயரில் இந்திய மற்றும் சர்வதேச கலைஞர்களுக்கு விருது அறிவித்துள்ளது.

இதில், பிரபல அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்-க்கு சிறந்த சர்வதேச கலைஞர் எனும் விருது அந்தத் தனியார் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்க பாடகிக்கு இந்திய அரசின் உயரிய விருது வழங்கப்படுவதாகக் கூறி இணையத்தில் வெளியான பதிவுகள் பெரும் அதிர்வுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக, தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழாவின் நிறுவனத் தலைவரான மும்பையைச் சேர்ந்த அனில் மிஷ்ரா மற்றும் அவரது மகன் மீது கடந்த 2025 ஆம் ஆண்டு பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The fact that pop singer Taylor Swift has received the Dadasaheb Phalke International Film Festival Award has caused a great deal of confusion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.