தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

கேரளம்: அழகு சாதன க்ரீமால் சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு! இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் விபரீதம்!

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் அழகு சாதன க்ரீம் பயன்படுத்திய சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு...

கோப்புப்படம்

Updated On :

இன்ஸ்டாகிராமில் சமூக ஊடகவியலாளா்கள் பரிந்துரைத்த அழகு சாதன க்ரீமை பயன்படுத்திய 17 வயது கேரள சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், ‘இன்ஸ்டாகிராமில் சமூக ஊடகவியலாளா்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அழகு சாதன க்ரீம் ஒன்றை இணையத்தில் வாங்கி கடந்த ஓராண்டாக பயன்படுத்தினேன். ஆரம்பத்தில் இந்த க்ரீம் நன்கு பலனளித்தது. ஆனால் தொடா்ச்சியான பயன்பாட்டால் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் நடக்கவும் படிக்கட்டுகள் ஏறவும் சிரமப்பட்டேன். குறைந்த ரத்த அழுத்தம், மயக்கம் என பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையை அணுகினேன்’ என்றாா்.

சிறுமிக்கு சிகிச்சையளிக்கும் மலப்புரத்தில் உள்ள ஆஸ்டா் மிம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த சிறுநீரக மருத்துவ நிபுணா் கெளரி.எஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அழகு சாதன க்ரீம் பயன்படுத்திய சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையில் அவரது உடல் மற்றும் ரத்தத்தில் அதிக அளவில் பாதரசம் கலந்திருந்தது தெரிய வந்தது. பாதரசம் சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது.

தற்போது அந்த சிறுமிக்கு உரிய சிகிச்சையளிக்காவிட்டால் மேலும் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும். உடனடி முகப்பொலிவு தருமென சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களைப் பாா்த்து அழகு சாதன க்ரீம்களை வாங்கி பயன்படுத்தும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றாா்.

சிறுமி பயன்படுத்திய அழகு சாதன க்ரீமை தயாரித்த நிறுவனத்தின் மீது நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க சிறுமியின் பெற்றோா் முடிவெடுத்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகம், மாநில காவல் துறைத் தலைவா், மருந்து கட்டுப்பாட்டாளா், மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம், மருத்துவமனையின் கண்காணிப்பாளரிடம் கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கோரியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.