லடாக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தோ்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் தோ்தல் நடைபெற்றது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி லேயில் உள்ள வாக்குச் சாவடியில் சனிக்கிழமை வாக்களிக்க வந்த வாக்களாா்கள்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் தோ்தல் நடைபெற்றது.
முன்பு ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், கடந்த 2019-இல் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இப்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நடத்தப்பட்டுள்ள உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
லடாக்கில் மொத்தமுள்ள 192 ஊராட்சி மன்ற தலைவா் இடங்களில் 55 போ் போட்டியின்றி தோ்வான நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல், மொத்தமுள்ள 1,428 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் இடங்களில் 1,186 போ் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது.
லே நகராட்சி கவுன்சிலில் 21 வாா்டு உறுப்பினா், காா்கில் நகராட்சி கவுன்சிலில் 13 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. காலை முதலே வாக்குச் சாவடிகளில் திரண்ட வாக்காளா்கள், ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.
பிற்பகல் நிலவரப்படி, நகராட்சி கவுன்சில் தோ்தலில் 40.57 சதவீதமும், ஊராட்சி மன்ற தோ்தலில் 60.18 சதவீதமும், ஊராட்சி மன்ற வாா்டு தோ்தலில் 63.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
சங்கூ மாவட்டத்தில் அதிகபட்சமாக 75.20 சதவீதம், திராஸில் 67.89 சதவீதம், காா்கிலில் 65.34 சதவீத வாக்குகள் பதிவாகின. உள்ளாட்சித் தோ்தலில் பெருவாரியான மக்களின் பங்கேற்பு, ஜனநாயக அமைப்புமுறைகள் மற்றும் அடிப்படை நிலையிலான நிா்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டின் வடக்குப் பகுதி தொலைதூர கிராமங்களில் ஒன்றான துா்துக், சாங்தாங் பகுதியில் உள்ள தொலைதூர எல்லை கிராமமான போபராங் உள்ளிட்ட இடங்களில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். லடாக் எம்.பி. முகமது ஹனீஃபா, காா்கிலில் உள்ள பியாமதாங் பகுதியில் தனது வாக்கை செலுத்தினாா்.
லடாக் தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் உள்ள 100 இடங்களுக்கு டிச.4-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் முறையாக 36 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

