லடாக்கில் 8 ஆவது மாவட்டம் உருவாக்கம்! துணைநிலை ஆளுநர் அறிவிப்பு!
லடாக்கில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து...

லடாக் துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்ஸேனா - கோப்புப் படம் | ENS
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லடாக்கில், புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்படுவதாக, துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்ஸேனா அறிவித்துள்ளார்.
லடாக்கில் அரசியலமைப்பு அடிப்படையிலான பாதுகாப்புகள் மற்றும் யூனியன் பிரதேச அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பு ஆகியவைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் லடாக் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தன.
இந்த நிலையில், லடாக்கில் “சங்கூ” எனும் புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக, துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்ஸேனா இன்று (அக். 16) அறிவித்துள்ளார். இதன்மூலம், லடாக்கில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கை மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்று விதமாக, அஞ்சுமான்-இ-சாஹிப் சமான் அமைப்பின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நுப்ரா, ஷாம், சாங்தாங், ஜன்ஸ்கார் மற்றும் டிராஸ் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Lieutenant Governor V.K. Saxena has announced the creation of a new district in Ladakh, one of India's Union Territories.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


