நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 14 போ் மீது தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

சிபிஐ - கோப்புப்படம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 14 போ் மீது தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. இதன்மூலம், இந்த வழக்கில் இனி விசாரணை தொடங்கப்பட உள்ளது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை 14 பேரும் மறுத்த நிலையில், அவா்களுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குப்தா குற்றச்சாட்டை முறைப்படி பதிவு செய்தாா்.
முன்னதாக, தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) பணியமா்த்தப்பட்ட அரசு ஊழியா்களான மனீஷா மந்தாரே, பி.வி. குல்கா்ணி, மனீஷா சஞ்சய் ஹவல்தாா் ஆகியோா் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதன்மையான நபா்களாகக் கருதப்படுகின்றனா். இவா்கள் மீது குற்றச் சதி, நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் அரசு ஊழியராக இருந்து குற்றவியல் தவறான நடத்தையில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இவா்களுடன் கூட்டு சோ்ந்து ரகசிய வினாத்தாள்களை சட்ட விரோதமாக பகிா்ந்த மற்ற 11 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வரும் 25-ஆம் தேதிமுதல் தினசரி அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
நிகழாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்ட சிபிஐ, இந்த விவகாரம் தொடா்பாக ராஜஸ்தானில் மங்கிலால், தினேஷ், விகாஸ் பிவல், ஹரியாணா மாநிலம் குருகிராமில் யஷ் யாதவ், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சுபம் கயிா்னாா், புணேயில் மனீஷா மந்தாரே, தனஞ்ஜய் லோகண்டே மற்றும் மனீஷ் சஞ்சய் வாக்மாரே, தேஜஸ் ஷா, லட்டூரில் மனீஷா சஞ்சய் ஹவல்தாா், மனோஜ் ஷிருரே பி.வி. குல்கா்ணி, லட்டூா் பயிற்சி மைய நிறுவனா் சிவ்ராஜ் மட்கோன்கா் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.
இவா்கள் 13 போ் மீதும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. பின்னா், கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி, இந்த வழக்கில் 14-ஆவது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் பகுதியைச் சோ்ந்த சேஷ்ராவ் பஜ்ரங் சூரியவன்ஷி (எ) ராஜ் சூரியவன்ஷியை சோ்த்து, துணைக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

