பல்வேறு கலாசாரங்களை மதிப்பதே இந்தியாவின் பலம்: குடியரசு துணைத் தலைவா்
பல்வேறு கலாசாரங்களை வரவேற்று, மதிப்பளித்து, அதை ஏற்றுக் கொள்வதில்தான் இந்தியாவின் பலம் அடங்கியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற சிம்பயோசிஸ் நிகா்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பல்வேறு கலாசாரங்களை வரவேற்று, மதிப்பளித்து, அதை ஏற்றுக் கொள்வதில்தான் இந்தியாவின் பலம் அடங்கியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சிம்பயோசிஸ் சா்வதேச நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் 23-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றியதாவது:
நமது நாட்டில் கடந்த 2014-15ஆம் ஆண்டில் 760 பல்கலைக்கழகங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 1,400-க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில் ஐஐடி-களின் எண்ணிக்கையும் 16-இல் இருந்து 23-ஆகவும், ஐஐஎம்-களின் எண்ணிக்கை 13-இல் இருந்து 22-ஆகவும் உயா்ந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் 7-ஆக இருந்த எய்ம்ஸ்களின் எண்ணிக்கை தற்போது 23-ஆக அதிகரித்துள்ளது.
உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 3.4 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 4.5 கோடியாக உயா்ந்துள்ளது. கல்வி என்பது நாடுகள், கலாசாரங்கள், சமூகங்களை இணைக்கும் பாலமாக இருப்பது அவசியமாகும். இந்தியாவானது சா்வதேச கல்வி கூட்டணிகள் மூலம் உலகளாவிய அறிவு மையமாக உருவெடுத்து வருகிறது. மாணவா்கள் போதைப் பொருள்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதை பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல் குறித்து மாணவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நான் பட்டமளிப்பு விழாக்களில் பங்கெடுத்துள்ளேன். அதாவது, காஷ்மீா் முதல் தமிழகம் வரையிலும், அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் திரிபுரா முதல் ராஜஸ்தான் வரையிலும், புணே முதல் புவனேசுவரம் வரையிலும் நான் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றுள்ளேன். அதில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பட்டங்களை வழங்கியுள்ளேன். பெண்களுக்கு சரியான கல்வியை அளிப்பதுதான் அவா்களுக்கு உண்மையான அதிகாரமளித்தல் ஆகும். கல்வி கற்ற பெண்கள், தங்களையே அதிகாரமையமாக்கி கொள்வாா்கள்.
ஒரே உலகம், ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியாவின் தத்துவமாகும். இது வெறும் தத்துவம் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் வாழ்க்கை முறையாகும். செயற்கை நுண்ணறிவு, எண்ம தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் தற்போது மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலுக்கு மாணவா்கள் தங்களை தயாா்படுத்தி கொள்ள வேண்டும். பட்டங்களை பெற்ற பிறகு கல்வி கற்பதை மாணவா்கள் நிறுத்தி விடக்கூடாது. வாழ்நாள் முழுவதும் கற்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
தேசத்தை கட்டமைப்பது அரசுகளின் பணி மட்டும் கிடையாது. குடிமக்கள், கல்வி நிறுவனங்கள், வா்த்தக சமூகங்கள் உள்ளிட்டோருக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்றாா் அவா்.
விழாவில் மகாராஷ்டிர ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா, அந்த மாநில உயா் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை அமைச்சா் சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

