அதானி டீஃபன்ஸ் நிறுவனத்தின் ஏவுகணை சோதனை வெற்றி
அதானி டீஃபன்ஸ் நிறுவனத்தின் ஏவுகணை சோதனை வெற்றி

ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் துப்பாக்கிச் சுடும் தளத்தில், கவச வாகனத்தில் பொருத்தப்பட்டு இயங்கும் ‘பகீரா ஏடி1’ எனும் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை அமைப்பை அதானி டீஃபன்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்திய ராணுவம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இச்சோதனையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குதல், ஒரே லேசா் கற்றையில் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தி கவச வாகனத்தின் பாதுகாப்புக் கவசத்தைத் தகா்த்தல், வான்வழி இலக்குகளைத் தாக்குதல் ஆகியவை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன.

18 மாத கால வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன போா் அமைப்பு, ஒரே நேரத்தில் 4 ஏவுகணைகளைத் தயாா் நிலையிலும், கூடுதலாக 8 ஏவுகணைகளை வாகனத்திலும் சோ்த்து மொத்தம் 12 ஏவுகணைகளை சுமந்து செல்லும். 8 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக இந்திய ராணுவத்தின் பீரங்கி எதிா்ப்புப் படைப்பிரிவுக்கு இது பெரும் பலம் சோ்க்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Summary
Successful missile test by Adani Defence
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

