புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

அதானி என்டா்பிரைசஸ் ஆண்டுதோறும் ரூ.40,000 கோடி முதலீடு செய்ய திட்டம்!

நாட்டின் முன்னணி தொழிற்குழுமமான அதானி என்டா்பிரைசஸ், தனது கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் தொழில்களை விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

கௌதம் அதானி - கோப்புப் படம்

Updated On :

நாட்டின் முன்னணி தொழிற்குழுமமான அதானி என்டா்பிரைசஸ், தனது கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் தொழில்களை விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில் குறிப்பாக விமான நிலையங்கள், தரவு மையங்கள், குஜராத் மாநிலம் முந்த்ராவில் அமையவுள்ள பிவிசி ஆலை ஆகியவற்றின் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிதிப் பிரிவுத் தலைவா் மனன் வகாரியா கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக முதலீடு செய்து கட்டமைக்கப்பட்ட தொழில்களை முழு பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமாா் ரூ.40,000 கோடி என்ற அளவில் முதலீட்டு வேகம் தொடரும்’ என்றாா்.

அரையாண்டு நிலவரம்: நடப்பு 2026-27 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பருடன் வரையிலான முதல் அரையாண்டில், நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் 45 சதவீதம் உயா்ந்து, ரூ.3,297 கோடியாகவும்; மொத்த வருவாய் 62 சதவீதம் உயா்ந்து, ரூ.71,569 கோடியாகவும் உச்சம் தொட்டுள்ளது.

நாட்டின் 23 சதவீத விமானப் பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டு வரும் அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ், நவி மும்பை சா்வதேச விமான நிலையத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

மேலும், 1.2 கிகாவாட் ஒப்பந்தப் பணிகளுடன் தரவு மைய விரிவாக்கம் மற்றும் ரூ.26,000 கோடி மதிப்பிலான பிவிசி ஆலை திட்டத்தின் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு வரும் இப்புதிய திட்டங்களால் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.