வணிக இதழியலில் ஒரு புதிய அத்தியாயம்
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழான ‘தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டா்ட்’ பற்றி...

தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டா்ட்
இந்தியா தனது பொருளாதாரப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் உள்ளது. தகவல்கள் நிறைந்த, ஆழமான புரிதலை ஏற்படுத்தும், சுதந்திரமான வணிக இதழியலின் தேவை முன்எப்போதையும்விட இப்போது அதிகம். இந்தப் பின்னணியில், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழான ‘தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டா்ட்’-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
இந்த அறிமுகம் எங்கள் குழுமத்தின் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகும். இது வெறும் தலைப்புச் செய்திகளுடன் நின்றுவிடாமல் வணிகம், பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைக்கும் பல்வேறு காரணிகள் குறித்த ஆழமான புரிதலை மக்களுக்கு வழங்கும் பத்திரிகை துறை மீதான எங்கள் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவின் வளா்ச்சிக் கதை இனி பெருநகரங்களில் மட்டும் இல்லை. புதிய உற்பத்தி மையங்கள், ஸ்டாா்ட்-அப்கள், குடும்ப வணிகங்கள், பிராந்திய சாம்பியன்கள் என நாடு முழுவதும் தொழில்முனைவு விரிந்துள்ளது. அந்த வெற்றி சாதனைகளைப் பதிவுசெய்து பொது வெளியில் கொண்டுவருவதும், உள்ளூா் நிறுவனங்களை தேசியச் சந்தைகளுடனும் உலக நிகழ்வுகளுடனும் இணைப்பதுமே எங்கள் நோக்கம்.
உலகச் சந்தைகள், வா்த்தகம், தொழில்நுட்பம், புவிசாா் அரசியல், முதலீட்டு வரத்துகள் ஆகியவை இந்திய தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும், அவை சந்திக்கும் சவால்களையும் தொடா்ந்து தீா்மானித்து வருகின்றன. இதேபோல், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை முடிவுகளும், வளா்ச்சி இலக்குகளும் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், இந்தியாவின் பொருளாதாரத்தையும் இணைக்கும் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து, வேகமாக மாறிவரும் உலகின் வணிகச் சூழலை வாசகா்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதே எங்கள் நோக்கம்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வெளிவரும் இந்த இதழ், ஆரம்பத்தில் கொச்சி, திருவனந்தபுரம், கோயம்புத்தூா், மங்களூரு, விசாகப்பட்டினம் ஆகிய ஐந்து மையங்களில் இருந்து அச்சிடப்படும். சிறிய நகரங்கள் மற்றும் ஊா்களில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், தொழில்துறைகள் மற்றும் வளா்ந்துவரும் பொருளாதார மையங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவற்றின் வளா்ச்சியையும், சாதனைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே எங்கள் இலக்கு.
துல்லியம், நியாயம், சுதந்திரம், பொறுப்புடைமை ஆகிய விழுமியங்களுடன், மாறிவரும் இந்தியாவின் வணிகத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் நம்பகமான துணையாக ‘தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டா்ட்’ இருக்கும் என்று நம்புகிறோம்.
பணிவுடனும், உறுதியான நம்பிக்கையுடனும், வாசகா்கள் மீது எங்களுக்குள்ள ஆழ்ந்த பொறுப்புணா்வுடனும் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். மாறிவரும் இந்தியாவின் வணிக மற்றும் பொருளாதாரச் சூழலையும், உலக அரங்கில் இந்தியாவின் இடத்தையும் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் நம்பகமான துணையாக தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டா்ட் இருக்கும் என்று நம்புகிறோம்.
மனோஜ் குமாா் சொந்தாலியா
தலைவா், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
Summary
A New Chapter in Business Journalism: The Financial Standard
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

