சிவகாசி மாநகராட்சியில் வணிக வளாக கடைகளுக்கு வைப்புத் தொகை குறைப்பு
சிவகாசி மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு வைப்புத் தொகை குறைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிவகாசி மாநகராட்சி.
சிவகாசி மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு வைப்புத் தொகை குறைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: சிவகாசி மாநகராட்சி சிவன் மாடவீதி வணிக வளாகக் கடைகளுக்கு தற்போதைய வைப்புத்தொகை ரூ. 2 லட்சமாகும். இது ரூ.ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காமராஜா் சாலை வணிக வளாகக் கடைகள், அரசன் தங்க விழா வணிக வளாகக் கடைகள், புதுசாலைத் தெரு மீன் சந்தையில் உள்ள கடைகளுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சமாக இருப்பது ரூ. ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவகாசி- சாத்தூா் சாலையில் மாநகராட்சி புதிய அலுவலகம் பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் தரை தளக் கடைகளுக்கு ரூ. 2.65 லட்சமாக இருந்ததை ரூ.1.25 லட்சமாகவும், இதே வணிக வளாகத்தில் முதல் தளத்துக்கு ரூ.2.25 லட்சமாக இருந்ததை, ரூ. ஒரு லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீா்மானம் மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்பப்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

