தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் 4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

தொகுதி மறுவரையறைக்கு ஆதரவளிக்க எம்.பி.க்களுக்கு தலா ரூ. 150 கோடி பேரம் பேசும் பாஜக?

தொகுதி மறுவரையறை மசோதாவுக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பாஜக பேரம் பேசுவது குறித்து...

Lok Sabha

மக்களவை - கோப்புப் படம்

Updated On :

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க எம்.பி.க்களுக்கு ரூ. 150 கோடி வரையில் பேரம் பேசப்படுவதாக பாஜக மீது சிவசேனை (உத்தவ்) குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய நிலையில், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, இவ்விரு மசோதாக்களையும் நிறைவேற்ற பாஜக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு திரட்ட எம்.பி.க்களிடம் பேரம் பேசப்படுவதாக சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க எம்.பி.க்களிடம் பேரம் பேசி வருகின்றனர். இரு நாள்களுக்கு முன்னர் ரூ. 100 கோடியாக இருந்த பேரம், இப்போது ரூ. 150 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் முக்கிய தலைவர்களுக்கு இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமித் ஷா ஏன் அடிக்கடி மும்பை வருகிறார்? இங்கு அப்படி என்ன பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன?

5 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு எம்எல்ஏ ரூ. 50 கோடிக்கும், ஒரு எம்.பி. ரூ. 75 கோடிக்கும் விலைக்கு வாங்கப்பட்டனர். இப்போது ரூ. 150 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு நல்ல விலைதான்.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடனான ஒப்பந்தத்தின்கீழ், சிவசேனை (உத்தவ்) கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்களுக்கு தலா ரூ. 80 கோடி வழங்கப்பட்டது. இங்கு அரசியல் தேசிய பங்குச் சந்தைபோல் நடக்கிறது" என்று தெரிவித்தார்.

Summary

Shiv Sena (UBT) MP Sanjay Raut alleges attempt to 'buy' MPs for passage of delimitation bill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.