கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் காலமானார்

உடல்நலக் குறைவால் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் காலமானதுப் பற்றி...

Ex-Jharkhand CM Arjun Munda''s mother dies at 92

சாய்ரா முண்டா

Updated On :

உடல்நலக் குறைவால் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் தாயார் சாய்ரா முண்டா காலமானார்.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சாய்ரா முண்டா சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் காலமானதாக அர்ஜுன் முண்டாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தாயாரின் மறைவு குறித்து முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அம்மா இனி இந்த உலகில் இல்லை. உங்களின் மறைவு ஒரு தாயின் அன்பான நிழலைப் பறித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிக வலிமையான ஆதரவையும் பறித்துவிட்டது.

உங்களின் இருப்பு ஒவ்வொரு கஷ்டத்தையும் சிறியதாகத் தோன்றச் செய்ததுடன், ஒவ்வொரு வலியையும் லேசாக்கியது," என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சாய்ரா முண்டாவின் மறைவுக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டாவின் தாயார் மறைவுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Summary

Former Jharkhand chief minister Arjun Munda's mother Sayra Munda died at a hospital here early on Monday, family members said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.