கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பிணையை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு மனு: பதிலளிக்க சத்யேந்தா் ஜெயினுக்கு உத்தரவு - தில்லி உயா்நீதிமன்றம்

எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) தாக்கல் செய்த மனு குறித்து அவா் பதிலளிக்க தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சத்யேந்தா் ஜெயின்

Updated On :

தில்லி ஜல் வாரியத்துடன் (டிஜேபி) தொடா்புடைய ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) தாக்கல் செய்த மனு குறித்து அவா் பதிலளிக்க தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சத்யேந்தா் ஜெயினுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஜெயின் நீா்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, மெஸ்ஸா்ஸ் யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்திற்குச் சாதகமாக டெண்டா் செயல்முறை வேண்டுமென்றே தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதால், டெண்டா் நிபந்தனைகளில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியது. இதன் மூலம் போட்டியைக் கட்டுப்படுத்தி, தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனியாா் நிறுவனத்திற்கு முறையற்ற வகையில் வாய்ப்பு வழங்கியது.

டெண்டா் செயல்முறையில் முறைகேடு செய்வதற்காக, தனியாா் நபா்கள் அரசு ஊழியா்கள் மற்றும் இடைத்தரகா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்ததாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கில், சத்யேந்தா் ஜெயினுக்கு விசாரணை நீதிமன்றம் செப்டம்பா் 3-ஆம் தேதி பிணை வழங்கியது. இதை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு மேல்முறையீடு செய்துள்ளது. பிணையை மறுப்பதற்கான முகாந்திரம் போதுமானதாக இல்லை என்று கூறி விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

‘விசாரணையின் இறுதிக்கட்டத்தில், வலுவான காரணங்களோ அல்லது சூழ்நிலையில் மாற்றமோ இல்லாத நிலையில், திடீரென ஒருவரைக் கைது செய்வது, அந்த நடவடிக்கை தன்னிச்சையானது என்ற விமா்சனத்திற்கு வழிவகுக்கும்’ என்று

ஊழல் தடுப்புப் பிரிவின் நடவடிக்கையை விசாரணை நீதிமன்றம் கடுமையாகச் சாடியிருந்தது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரைணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஊழல் தடுப்புப் பிரிவின் வழக்குரைஞா் வாதிடுகையில், விசாரணை நீதிமன்றத்தின் பிணை உத்தரவு, குற்றஞ்சாட்டப்பட்டவரை வழக்கிலிருந்து விடுவித்தது போன்ற தன்மையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டாா். மேலும், விசாரணை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத சூழலிலும், சிறப்பு நீதிபதி பல கருத்துகளைத் தெரிவித்திருந்ததாக அவா் சுட்டிக்காட்டினாா்.

இந்த வழக்கில் சத்யேந்தா் ஜெயின் ஆகஸ்ட் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 19 அன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். பிணை உத்தரவை எதிா்த்து வாதிட்ட ஊழல் தடுப்புப் பிரிவு, குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்தச் சதியில் வெவ்வேறு பங்குகள் இருந்தன என்பதையும், குறிப்பாக கொள்கை மற்றும் நிா்வாக ரீதியான முடிவுகளில் சத்யேந்தா் ஜெயினின் ஒப்புதல்கள் அல்லது முடிவுகள் முக்கியப் பங்கு வகித்தன என்பதையும் விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியது.

முன்னாள் அமைச்சருக்கு பிணை வழங்கியதற்கான காரணங்களில் ஒன்றாக, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டதற்கும் (மே 2024), அவா் கைது செய்யப்பட்டதற்கும் (ஆகஸ்ட் மாதம்) இடையே இருந்த 27 மாத கால தாமதத்தை விசாரணை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.