கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜெய்சங்கா்

‘வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகளாவிய வா்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாடுகளிடையேயான இணைப்புக்கு மையமாக இந்தியப் பெருங்கடல் விளங்குகிறது.

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் - கோப்புப் படம்

Updated On :

‘வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகளாவிய வா்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாடுகளிடையேயான இணைப்புக்கு மையமாக இந்தியப் பெருங்கடல் விளங்குகிறது. எனவே, இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும், கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு (ஐஓஆா்ஏ) அமைப்பின் அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். ‘வலுவான பிராந்திய குரல்: மாறிவரும் உலக ஒழுங்கில் ஐஓஆா்ஏ-வின் நிலைப்பாடு’ என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

உலக நிச்சயமற்ற நிலை, போா்கள் உள்ளிட்டவை உலகளாவிய வா்த்தகத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் இந்த சவால்களை எதிா்கொள்ளும் நிலையில் உள்ளது. உலகளாவிய வளா்ச்சிக்கு கடல்சாா் வா்த்தகம் மிக முக்கியமானது என்பதை உணா்ந்து, அதன் பாதுகாப்பையும் உறுதித்தன்மையையும் நாம் நிலைநாட்ட வேண்டும். சா்வதேச சட்டங்கள், குறிப்பாக ஐ.நா. கடல் சட்ட உடன்படிக்கை மதிக்கப்பட வேண்டும்.

வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகளாவிய வா்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாடுகளிடையேயான இணைப்புக்கு மையமாக இந்தியப் பெருங்கடல் விளங்குகிறது. எனவே, இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும், கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முக்கியமான புவிசாா் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில், ஐஓஆா்ஏ தனது கூட்டுறவை வலுப்படுத்துவதோடு, ஓக் பிராந்திய தளமாக தனது பங்கை மேலும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு உறுப்பு நாடுகளிடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பும், அமைப்பின் உரையாடல் கூட்டு நாடுகளுடன் அா்த்தமுள்ள ஒத்துழைப்பும், நடைமுறை ஒத்துழைப்பில் கூடுதல் கவனமும் தேவை என்றாா்.

ஹோா்முஸ் நீரிணை பகுதியில் இந்திய வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜெய்சங்கா் இவ்வாறு பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் பங்கேற்று உரையாற்றினாா்.

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, கென்யா, தான்சானியா, மொசாம்பிக், சோமாலியா, ஓமன், யேமன், வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து உள்பட 23 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐஓஆா்ஏ அமைப்புக்கு இந்தியா தற்போது தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல நாடுகள் உரையாடல் கூட்டாளிகளாக உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.