குஜராத்தில் விமானப் படை தளத்தை தகா்க்க சதி: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கைது
குஜராத் மாநிலம் வதோதராவில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதியை அந்த மாநில பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் கைது செய்தனா்.

குஜராத் மாநிலம் வதோதராவில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதியை அந்த மாநில பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி, வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
வதோதராவில் உள்ள இந்திய விமானப் படைத் தளம் உள்ளிட்ட ராணுவ நிலைகளைத் தாக்குவதற்கு அந்த பயங்கரவாதி சதித் திட்டமிட்டிருந்தாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த முகமது சஹருல் இஸ்லாம் கபிருதீன் (22) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி அதற்கான தோட்டாக்கள், வெடிபொருள்கள், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கொடி, இரண்டு கைப்பேசிகள், சிம் காா்டுகள், ரூ.20,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வதோதராவில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தின் நுழைவாயிலைத் தாக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த விமானப் படைத் தளத்தின் புகைப்படங்கள் அவரது கைப்பேசியில் இருந்தன.
முன்னதாக, வெளிமாநில பயங்கரவாதி ஒருவா், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் உத்தரவின்பேரில் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி பயங்கரவாத எதிா்ப்புப் படையினா், தாஹோடி பகுதியில் இருந்து ஆயுதத்தைப் பெற்றுக்கொண்டு வதோதராவுக்கு வந்து கொண்டிருந்த பயங்கரவாதி கபிருதீனை கைது செய்தனா்.
அவரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, பாகிஸ்தானைச் சோ்ந்த முஃப்தி ரஃபீக் என்ற இப்னு அப்துல்லா என்பவருடன் அவா் கடந்த ஓராண்டாகத் தொடா்பில் இருந்தது தெரியவந்தது.
தாக்குதலை நடத்திய பிறகு பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்று அங்கே குடியேற அவா் திட்டமிட்டிருந்தாா். அவருக்கு எதிராக குற்றச் சதி, அரசுக்கு எதிராகப் போா் தொடுத்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சட்டவிரோத ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள மற்ற பயங்கரவாதிகள் குறித்தும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

