பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா் கைது

பெங்களூருவில் இருந்து கரூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கரூரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட கா்ணாராம் (அமா்ந்திருப்பவா்), அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள். உடன், அவரை பிடித்த காவல்துறையினா்.

Updated On :

பெங்களூருவில் இருந்து கரூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்நிலைய ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் தவுட்டுப்பாளையம் சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை பிற்பகலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் காருக்குள் 240 கிலோ எடைகொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டிவந்தவரிடம் விசாரித்தபோது, அவா் ராஜஸ்தான் மாநிலம், ஜலோா் மாவட்டத்தைச் சோ்ந்த கா்ணாராம் (32) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருள்களை கரூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கா்ணாராமை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த ரூ.1.92 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களையும், காரையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கா்ணாராமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.