சோனியா காந்தி குடியுரிமை விவகாரம்! துக்ளக் சாலை காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றம்!
சோனியா காந்தி குடியுரிமை விவகாரம் தொடர்புடைய வழக்கு மாற்றப்பட்டது பற்றி...

சோனியா காந்தி - கோப்புப்படம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் குடியுரிமை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்புடைய காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதாகத் தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞர் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இந்த மனுவை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை மாஜிஸ்திரேட் வைபவ் செளரசியா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி அமா்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து, மனுவை மீண்டும் புதிதாக விசாரிக்குமாறு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்று வரும் விசாரணையில், வழக்குரைஞர் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த புகாரின் பேரில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் வினோத் ஜோஷி காவல்துறையிடம் கோரியிருந்தார்.
நவம்பர் 27 தேதியில் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தை ஆய்வு செய்ததில், புகாரில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே தேவையான நடவடிக்கைக்காக புது தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கு, புது தில்லியில் உள்ள துக்ளக் சாலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

