தில்லி குருத்வாராவில் சோனியாவின் புத்தகம் எரிப்பு

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தில்லியில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியா்கள் கொல்லப்பட்டனா்

சோனியா காந்தி

Updated On :

1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரும், தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டிஎஸ்ஜிஎம்சி) உறுப்பினா்களும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் புத்தகத்தின் நகலை தில்லியில் உள்ள ரகாப் கஞ்ச் குருத்வாராவில் வியாழக்கிழமை எரித்துத் தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தில்லியில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியா்கள் கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவங்கள் குறித்து சோனியா காந்தி விவரித்த விதம், பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை வெளியான ‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகத்தில், 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தை, நாட்டின் வரலாற்றில் ஒரு துயரமான மற்றும் அவமானகரமான அத்தியாயம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அவரது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் இதயத்தில் எந்தவிதமான மதவெறியோ அல்லது வெறுப்புணா்வோ இருந்ததில்லை என்றும், நிா்வாகம் முழுமையாகச் செயலிழந்து காட்டுமிராண்டித்தனம் தலைதூக்கிய சூழலுக்குள் அவா் தள்ளப்பட்டாா் என்றும் அந்தப் புத்தகத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, சீக்கிய கலவரம் குறித்த உண்மைகள் அந்தப் புத்தகத்தில் மறைக்கப்பட்டிருப்பதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா குற்றஞ்சாட்டியிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.