மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

என் முதல் குழந்தையை இழந்தேன்... உடலை ஆற்றில் வீச மறுத்தேன்: சோனியா

என் முதல் குழந்தையை பிறந்து இறந்துவிட்டது, உடலை ஆற்றில் வீச மறுத்துவிட்டேன் என சோனியா முதல்முறையாக பகிர்ந்த தகவல் பற்றி..

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவுதினத்தையொட்டி, புது தில்லியில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி.

சோனியா காந்தி - ஏஎன்ஐ

Updated On :

ராகுல் காந்திக்கு முன்பே ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டதாகவும், அந்தக் குழந்தையை ஆற்றில் வீசச் சொன்னபோது தான் மறுத்துவிட்டதாகவும் சோனியா காந்தி தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்' என்ற புத்தகத்தில் சோனியா எழுதியிருக்கும் பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

அதில்தான் இதுவரை அவர் பகிர்ந்திராக ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியின் வீடு முழுக்க மகிழ்ச்சியால் திளைத்திருந்தது. காரணம், சோனியா தான் கருவுற்றிருப்பதை அறிவித்தபோது, ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்தது. எப்போதும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கும் இந்திராவே, சோனியாவை கட்டியணைத்து ஒரு பெரிய குழந்தைக்கு சிறிய குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறி மகிழ்ந்தார்.

ஆனால், இந்த மகிழ்ச்சி வெகுநாள்கள் நீடிக்கவில்லை. 1969ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி சோனியாவுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. ஒட்டுமொத்த குடும்பமும் கலங்கிப்போனது.

புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாவது, குழந்தையின் அழுகுரலைக் கேட்டேன். இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை நானும் ராஜீவ்வும் சென்று பார்த்தோம், அப்போதே, குழந்தை உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறினர், அதுபோலவே, காலை 6 மணிக்கெல்லாம் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.

உடைந்துவிட்டோம், கதறி அழுதோம். ஹிந்து முறைப்படி பிறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது, ஆற்றில் விடவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், ஆற்றில் வீச நான் மறுத்துவிட்டேன்.. மெஹரௌலியில் ஃபேரோஸ்காந்தியின் பண்ணை வீட்டில் குழந்தை புதைக்கப்பட்டது என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தி, ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகத்தில் தன்னுடைய வாழ்வின் பல முக்கிய தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்தான் இந்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER