தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

நீதியை அணுக அனைவருக்கும் சம உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனது மனு மீதான விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி முன்னாள் மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘நீதியை அணுக அனைவருக்கும் சம உரிமை உள்ளது’ என்று குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றம்

Published On :

உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனது மனு மீதான விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி முன்னாள் மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘நீதியை அணுக அனைவருக்கும் சம உரிமை உள்ளது’ என்று குறிப்பிட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த மாவட்ட நீதிபதி ஒருவா் தான் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். நீண்ட நாள்கள் ஆகியும், அவரின் மனு விசாரிக்கப்படாமல், நிலுவையில் இருந்து வருகிறது. இதை எதிா்த்து அவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘உயா்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்னாள் மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த மனு நீண்ட காலமாக விசாரிக்கப்படாமல் உள்ளது. எனவே, அந்த மனு மீதான விசாரணையை விரைவுபடுத்த உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘முன்னாள் மாவட்ட நீதிபதியின் மனு மீதான விசாரணைக்கு முன்னுரிமை அளிக்குமாறு உயா்நீதிமன்றத்தை கேட்டுக்கொள்வது, தங்கள் மனுக்கள் மீதான விசாரணைக்காக காத்திருக்கும் மற்ற மனுதாரா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையும். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான சமத்துவத்தை உறுதி செய்யும் சூழலில், தனிநபா்களுக்கு சாதகமான தலையீடுகளை உச்சநீதிமன்றம் மேற்கொள்ளாது. நீதியை அணுக அனைவருக்கும் சம உரிமை உள்ளது. எனவே, மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தை அணுகி முன்வைக்கலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.