
அபிஜீத் தீப்கேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்! ஏன் தெரியுமா?
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு எதிராக மகாராஷ்டிர மாணவர்கள் போராட்டம்...

அபிஜீத் தீப்கே - பிடிஐ
நீட் விவகாரத்தைப் பாதியிலேயே கைவிட்டு வேறு விவகாரங்களுக்குச் சென்றுவிட்டார் என அபிஜீத் தீப்கேவுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்துக்குப் பெரும் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், தில்லி போராட்டத்தின்போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளின் நிலை குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தி மகாராஷ்டிரத்தின் லாத்தூரில் மாணவர்கள் சிலர் இன்று (அக்.2) போராட்டம் நடத்தியுள்ளனர்.
லாத்தூரின் காந்தி சௌக் பகுதியில், தீப்கேவுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகள் மற்றும் தீப்கேவின் படத்தை காலணியால் அடித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி, போராட்டக்குழுவின் தலைவர் சதீஷ் கராண்டே கூறுகையில்,
“நீட் விவகாரம் குறித்து தீப்கே இப்போது ஏன் மௌனமாக இருக்கிறார்? நீட் தொடர்பான வழக்கின் நிலை என்ன? நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அவர் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்?
இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எடுத்துரைத்து மாணவர்களின் எதிர்காலத்துக்காக அவர் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எஸ்ஐஆர் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் சிஜேபி தலைமையில் இன்று போராட்டம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Some students in Maharashtra have protested against Abhijit Deepke, alleging that he abandoned the NEET issue midway and moved on to other matters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







