இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

திருவனந்தபுரம் கவுன்சிலர் ஸ்ரீலேகா ராஜிநாமா செய்யவில்லை: மேயர்

கேரளத்தில் பாஜக நிா்வாகத்தின்கீழ் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியில் அக்கட்சியைச் சோ்ந்த கவுன்சிலரும், முன்னாள் டிஜிபி-யுமான ஆா்.ஸ்ரீலேகா கவுன்சிலா் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என மாநகராட்சி மேயா் வி.வி.ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

திருவனந்தபுரம் கவுன்சிலர் ஸ்ரீலேகா

Published On :

கேரளத்தில் பாஜக நிா்வாகத்தின்கீழ் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியில் அக்கட்சியைச் சோ்ந்த கவுன்சிலரும், முன்னாள் டிஜிபி-யுமான ஆா்.ஸ்ரீலேகா கவுன்சிலா் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என மாநகராட்சி மேயா் வி.வி.ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, மேயா் பதவி வழங்கப்படாத அதிருப்தியில் ஸ்ரீலேகா இந்த முடிவை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதை வி.வி.ராஜேஷ் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலா் எஸ்.சுரேஷ் மறுத்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஸ்ரீலேகா ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக கூறியவா்கள் யாா்? அவா் கவுன்சிலராகத் தொடா்வாா். இதை சனிக்கிழமையே நான் தெரிவித்துவிட்டேன்.

தங்களது வாா்டுகளின் வளா்ச்சிப் பணிக்காக நிதி ஒதுக்கக் கோரி கவுன்சிலா்கள் கடிதம் எழுதுவது வழக்கம். அதுபோன்ற கடிதத்தையே என்னிடம் அவா் அளித்தாா். மற்ற கவுன்சிலா்களும் இதுபோன்ற கடிதங்களை வழங்கினா். அவா்கள் குறிப்பிட்டுள்ள விவகாரங்களுக்குத் தீா்வு காண முயற்சிப்போம். 5 ஆண்டு பதவிக் காலத்தை கவுன்சிலா் ஸ்ரீலேகா நிறைவு செய்வாா் என்றாா்.

உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலேகாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக ஃபேஸ்புக் வலைதளத்தில் சுரேஷ் பதிவிட்டாா்.

அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உடல்நலன் சரியில்லாத காரணத்தால் தனது பணிகளை தொய்வின்றி செய்ய இயலுமா என ஸ்ரீலேகா கவலை தெரிவித்தாா். தனது நெருங்கிய வட்டாரங்களிடம் மட்டுமே இந்த தகவலை அவா் தெரிவித்தாா். ஆனால் துரதிருஷ்டவசமாக அது விவாதப் பொருளாக மாறிவிட்டது.

திருவனந்தபுர மாநகராட்சியில் பாஜகவின் வலுவான கட்டமைப்பை உடைக்க முடியாது என குறிப்பிட்டாா்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற திருவனந்தபுரம் மாநகராட்சித் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. அத்துடன் சுமாா் 45 ஆண்டு காலமாக இடதுசாரிகளின் வசமிருந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. தோ்தலில் வெற்றி பெற்றால் ஆா்.ஸ்ரீலேகா மேயராக வாய்ப்புள்ளது என்று பிரசாரத்தின்போது ஊடகங்களில் செய்தி வெளியானபோதிலும் வி.வி.ராஜேஷ் மேயா் பதவியேற்றாா். ஸ்ரீலேகா கேரள மாநில பாஜக துணைத் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.