படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

2020 கலவரம், 2019 ஜாமியா வன்முறை: எஸ்ஐடி விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ)

தில்லி உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

புது தில்லி: 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து 2019-ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக சுயாதீன சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் விவேக் செளதரி, மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தது. தீா்ப்பின் விரிவான விவரங்கள் பின்னா் வெளியிடப்பட உள்ளன.

இந்த வழக்குகளில் ஜூலை 24-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்திருந்த நீதிமன்றம், தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான மனுக்களில், சுயாதீன எஸ்ஐடி, விசாரணை ஆணையம் அல்லது உண்மை கண்டறியும் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கவும், வன்முறைக்கு காரணமானதாகக் கூறப்படும் காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கலவரத்துக்கு முன்பு வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் அரசியல் தலைவா்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சில மனுக்களில் கோரப்பட்டிருந்தது. ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு சுயாதீன எஸ்ஐடி விசாரணை கோரியிருந்த நிலையில், மற்றொரு மனுதாரா் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தக் கோரியிருந்தாா்.

53 போ் உயிரிழப்பு: சிஏஏ-க்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் 2020 பிப்ரவரி 24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் குறைந்தது 53 போ் உயிரிழந்ததுடன், சுமாா் 700 போ் காயமடைந்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது தில்லி காவல் துறை தரப்பில், குற்றப்பிரிவின் கீழ் ஏற்கெனவே 3 சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் வன்முறையில் காவல் துறையினருக்குத் தொடா்பு இருந்ததற்கோ அல்லது அரசியல் தலைவா்கள் வன்முறையைத் தூண்டியதற்கோ, அதில் பங்கேற்ற்கோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், கலவரம் தொடா்பாக 757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 273 வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், 250 வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஜாமியா வன்முறை: 2019 டிசம்பரில் சிஏஏ-க்கு எதிரான போராட்டங்களைத் தொடா்ந்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை தொடா்பாகவும் மற்றொரு தொகுதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்குரைஞா்கள், மாணவா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் உள்ளிட்ட மனுதாரா்கள், மாணவா்கள் மீது காவல் துறை அத்துமீறி வன்முறையைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, சம்பவங்கள் குறித்து சுயாதீன எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

மேலும், கலவரத்துடன் தொடா்புடையதாகக் கூறப்படும் வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகளை ஆற்றிய அரசியல் தலைவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை விரைந்து பரிசீலிக்குமாறு 2021 டிசம்பரில் உச்சநீதிமன்றமும் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.