சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே பாஜகவில் இணைந்த பிரபல நடிகை!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்ட மறுநாளே அக்கட்சியில் இணைந்த கோயல் மல்லிக் பற்றி....

Ex-TMC Rajya Sabha MP Koyel Mallick joins BJP a day after party names her for Upper House

நடிகை கோயல் மல்லிக்.

Published On :

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்ட மறுநாளே, பெங்காலி நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.

பெங்காலி மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சித் மல்லிக்கின் மகளான இவர், கடந்த ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகச் சிறிது காலம் பதவி வகித்திருந்தார். பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அவர் அப்பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதில் மேற்கு வங்கத்திலிருந்து கோயல் மல்லிக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு பாஜகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாளே, நடிகை கோயல் மல்லிக் திங்கள்கிழமை அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

பாஜகவின் மேற்குவங்க மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்த கோயல் மல்லிக்கை பாஜக மாநிலப் பொதுச் செயலர் சஷி அக்னிஹோத்ரி வரவேற்றார். தொடர்ந்து, திங்கள்கிழமையே மாநிலங்களவை இடத்திற்கான தனது வேட்புமனுவை கோயல் தாக்கல் செய்வார் என்று அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கோயல் மல்லிக், நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி, மக்களின் நலனுக்காகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறினார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறவுள்ளது.

Summary

Bengali film actor Rukmini Mallick, popularly known as Koyel Mallick, joined the BJP on Monday, a day after the party nominated her for the upcoming Rajya Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER