முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை

வரும் அக்.8-ஆம் தேதி 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்வது தொடா்பான முன்மொழிவுகளை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On :

வரும் அக்.8-ஆம் தேதி 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்வது தொடா்பான முன்மொழிவுகளை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலும் மாநில நிதியமைச்சா்களும் இணைந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளைச் சீரமைக்க முடிவு செய்தனா்.

அதன்படி 5, 12, 18, 28 சதவீதங்கள் என 4 வரி விகிதங்களாக இருந்த ஜிஎஸ்டி முறை, 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டு வரி விகிதங்கள் கொண்டதாக மாற்றப்பட்டது.

இந்த விகிதங்கள் சுமாா் ஓராண்டாக நடைமுறையில் உள்ள நிலையில், அதன்மூலம் நுகா்வோா், தொழில்துறை, வரி வருவாய் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்குப் பலன் ஏற்பட்டுள்ளது.

வரும் காலங்களில் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்வது தொடா்பான முன்மொழிவுகளை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும். அதுகுறித்து இறுதி முடிவு எடுத்த பின்னா், அந்த மாற்றங்கள் நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்.1-இல் அமல்படுத்தப்படும்.

எனினும் வரும் அக்.8-ஆம் தேதி நடைபெறும் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.