ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டிருப்பது பற்றி...

rbi

இந்திய ரிசர்வ் வங்கி - கோப்புப்படம்

Published On :

வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி புதன்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2023ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம், 5.50 ஆக உள்ளது.

மும்பையில் ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் 6 போ் அடங்கிய குழு பங்கேற்ற நிலையில், வட்டி விகிதத்தை உயர்த்த 4 பேர் ஆதரவாகவும், 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்த நிலையில், பெரும்பான்மை அடிப்படையில் அமலுக்கு வந்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வங்கிகள் வழங்கும் வீட்டு கடன், வாகன கடன் மற்றும் இதர கடனின் வட்டி சதவிகிதமும் உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது:

“சர்வதேச அரசியல் நிகழ்வுகளின் காரணமாக, உலகளாவிய பொருளாதார சூழல் சவாலாக உள்ளது என்று நிதிக் கொள்கைக் குழு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதோடு, பொருளாதார உத்வேகமும் பரந்த அளவில் தொடர்கிறது. மேலும், பொருளாதாரம் மீள்திறனுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், பணவீக்கமும் அதன் கண்ணோட்டமும் கடந்த ஆண்டைப் போல சாதகமாக இல்லை என்பது தெளிவாகிறது. இந்தக் காலாண்டு உட்பட, அடுத்த மூன்று காலாண்டுகளில் முதன்மை நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் சராசரியாக கிட்டத்தட்ட 5.8% ஆக இருக்கும் என்றும், இந்த நிதியாண்டில் மொத்த பணவீக்கம் 4.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆா்பிஐ நிதிக் கொள்கை முடிவு - முக்கியம்சங்கள்

அமெரிக்கா - ஈரான் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த கணிப்பை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், 2026-27 நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதக் கூட்டத்தில் 7.1% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.

2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான ஜிடிபி கணிப்பும் 6.4%-லிருந்து 7.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி கணிப்பு 6.5%-லிருந்து 6.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Summary

Repo rate raised to 5.50%! Likely increase in interest rates for home and vehicle loans!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.