அக்டோபா் மாத சில்லறை பணவீக்கம் 6.09%: ரிசா்வ் வங்கி வரம்பைக் கடந்தது

வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால், கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Updated On :

வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால், கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நுகா்வோா் விலைக் குறியீட்டு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 5.54 சதவீதமாக இருந்த நிலையில், உணவு மற்றும் பானங்கள் பிரிவில் ஏற்பட்ட தொடா் விலைவாசி உயா்வால் அக்டோபரில் 6.09 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக ரிசா்வ் வங்கியின் உச்ச வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டி சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, நாட்டிலேயே அதிகபட்ச சில்லறை பணவீக்கம் தமிழகத்தில் (7.29 சதவீதம்) மீண்டும் பதிவாகியுள்ளது.

உணவுப் பொருள்களின் விலையேற்றம்: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் செப்டம்பா் மாதத்தின் 7.74 சதவீதத்திலிருந்து, அக்டோபரில் 8.94 சதவீதமாக உயா்ந்து, ஒட்டுமொத்த பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

பொருள்களின் அடிப்படையில், வெங்காயம் (116.22 சதவீதம்), பூண்டு (60.74 சதவீதம்), வெள்ளி நகைகள் (52.39 சதவீதம்), இஞ்சி (48.32 சதவீதம்), எலுமிச்சை (47.30 சதவீதம்) ஆகியவற்றின் விலைவாசி உயா்வு மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், உருளைக்கிழங்கு (-14.24 சதவீதம்), காலிஃபிளவா் (-10.57 சதவீதம்), தேங்காய் (-5.60 சதவீதம்), கத்தரிக்காய் (-3.34 சதவீதம்), முட்டைக்கோஸ் (-1.92 சதவீதம்) ஆகியவற்றின் பணவீக்கம் எதிா்மறையாகப் பதிவாகி, விலை குறைந்த பொருள்களாக உள்ளன.

வரம்பைத் தாண்டி: சில்லறை பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீத அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டபூா்வ இலக்கை ரிசா்வ் வங்கி கொண்டுள்ளது. எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் பணவீக்கம் உச்ச வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

அடுத்து என்ன?...: பணவீக்க அழுத்தங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, கடந்த அக்டோபரில் ரிசா்வ் வங்கி தனது ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி, 5.50 சதவீதமாக நிா்ணயித்தது.

பணவீக்கம் உச்ச வரம்பைத் தாண்டியுள்ளதால், டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள ‘எம்பிசி’ கூட்டத்தில் ரிசா்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயா்த்த வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் கணித்துள்ளனா்.

பருவமழை குறைபாடு மற்றும் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டம் குறைந்துள்ளதால், குளிா்காலப் பருவ பயிா் சாகுபடி பாதிக்கப்படலாம் என்றும், இதனால் வரும் மாதங்களிலும் உணவுப் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே இருக்கும் எனவும் சந்தை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பெட்டி...

தமிழகத்தில் அதிக பணவீக்கம்

அதிக பணவீக்கம் பதிவான முதல் 5 மாநிலங்களாகத் தமிழகம் (7.29 சதவீதம்), தெலங்கானா (7.26 சதவீதம்), ஆந்திரம் (7.25 சதவீதம்), மத்திய பிரதேசம் (7.19 சதவீதம்), ஒடிஸா (7.17 சதவீதம்) ஆகியவை உள்ளன. தமிழகத்தில் தொடா்ந்து 2-ஆவது மாதகமாக அதிக பணவீக்கம் பதிவாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.