
பிறந்தநாள், திருமணத்துக்காக காத்திருந்த குடும்பம்! நடப்பதோ ஆயுதப் படை வீரரின் இறுதிச் சடங்கு!
பிறந்தநாள், திருமணத்துக்காக காத்திருந்த குடும்பத்தினர் ஆயுதப் படை வீரரின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

அஸ்ஸாம் ஆயுதப் படை வீரர் வீர மரணம் - file photo
அஸ்ஸாம் ஆயுதப் படை வீரர் இன்று 31வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்குப் பயணப்பட்டுக்கொண்டுள்ளது.
வி தேஜாவுக்கு ஓரிரு மாதத்தில் நடக்கவிருக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மகிழ்ச்சியோடு செய்து கொண்டிருந்த குடும்பம், தற்போது இறுதிச் சடங்குக்குத் தயாராகி வருகிறது.
அஸ்ஸாம் ஆயுதப் படை வீரர் வி தேஜா, பணியின்போது துப்பாக்கிக் குண்டு காயமடைந்து பலியானார். இவர் இன்று தன்னுடைய 31வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில், அதே நாளில் அவருக்கு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் கனத்த இதயத்தோடு செய்கிறார்கள்.
டிசம்பர் மாதம் இவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் பலியானதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமணத்துக்காக 50 நாள்கள் விடுமுறை கேட்டிருந்தான். தீபாவளிக்கு ஊருக்கு வருவேன் என்று சொல்லியிருந்தவன், 50 நாள்கள் குடும்பத்தோடு இருக்கப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தான். ஆனால், இப்போது உயிரற்ற அவரது உடலுக்காக ஒட்டுமொத்த நகரமும் காத்திருக்கிறது என்கிறார்கள் அவரது உறவினர்கள்.
தேஜா உடல் இன்று விசாகப்பட்டினத்துக்கு ஹெலிகாப்டர் வழியாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த ராயகடா பகுதி மக்கள் அவரது வீட்டு முன் திரண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





