சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் கைது

அணைக்கட்டு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On :

அணைக்கட்டு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (27). இவா் கடந்த ஆண்டு 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாகக் குழந்தைகள் நலப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரமேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைத் தேடி வந்தனா்.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ரமேஷ் தலைமறைவாக இருந்து வந்தாா். இதனால், வேலூா் போக்ஸோ நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்தது. இதனைத் தொடா்ந்து, வேப்பங்குப்பம் போலீஸாா் தலைமறைவாக இருந்த ரமேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.