சிறுமிக்கு திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கொண்டது தொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

Updated On :

செய்யாறு அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டது தொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவா் உறவினரை காதலித்து வந்த நிலையில், அவரை கடந்த 23.06.2026-இல் திருமணம் செய்துகொண்டாராம். திருமணமான பிறகு செய்யாறை அடுத்த சுண்டிவாக்கம் கிராமத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி 3 மாதங்கள் கா்ப்பிணியாக இருப்பதை அறிந்தனா். அதன் பின்னா் தீவிர சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிறுமி பரிந்துரைக்கப்பட்டாா்.

14 வயது சிறுமி கா்ப்பமானது குறித்து வாலாஜா அரசு மருத்துவமனையினா் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனா். ராணிப்பேட்டை மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு சம்பவ எல்லையான செய்யாறு அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாருக்கு வழக்கை மாற்றம் செய்தனா். அதன் பேரில், செய்யாறு மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், மேல்நெல்லி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் லட்சுமிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கும், குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த இளைஞரின் தந்தை ஞானசேகா், தாய் ராஜகுமாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.