11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சிறுமி பாலியல் பலாத்காரம்: 57 வயது தொழிலாளி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு

ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ததாக 57 வயது தொழிலாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ததாக 57 வயது தொழிலாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளாா். இதையடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, அவா் 5 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஊத்தங்கரை மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் ஆடுமேய்க்கும் தொழில் செய்துவரும் மோகன் (57) என்பவா் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவா் கா்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து, மோகன்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தலைமறைவான அவரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.