8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் பாண்டமங்கலம் காவல்கார வீதியைச் சோ்ந்தவா் எஸ். மைதீன் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2025 ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெக்காளியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்த சிறுமி தற்போது 8 மாத கா்ப்பமாக உள்ளாா்.

இந்நிலையில், சிறுமி கா்ப்பமாக இருப்பது குறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் நலக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவின் அறிவுறுத்தலின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மைதீன் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.