சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

பெருந்துறை அருகே சிறுமிக்கு திருமணம்: 5 போ் மீது வழக்கு

குழந்தைத் திருமணம் - சித்திரிப்பு

Updated On :

பெருந்துறை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாா், மணமகன் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த வெள்ளோடு, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரி. இவரது மகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில், ஈஸ்வரி தனது 18 வயது மகளுக்கு பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சோ்ந்த மணிமாலா மகன் கெளதம் என்பவருக்கு இரு வீட்டாா் ஏற்பாட்டின்படி, வெள்ளோட்டில் உள்ள பெரியகாண்டியம்மன் கோயிலில் நவம்பா் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து, கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், அவா்கள் விசாரணை நடத்தினா். அதில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, சென்னிமலை, வட்டார வளா்ச்சி அலுவலக, ஊா் நல அலுவலா் பாப்பாத்தி கொடுத்த புகாரின்பேரில், வெள்ளோடு போலீஸாா் சிறுமியின் தாயாா் ஈஸ்வரி (48), மணமகன் கெளதம் (28), அவரது தாயாா் மணிமாலா (50) மற்றும் சிறுமியின் உறவினா்கள் செல்வக்குமாா் (53), அவரது மனைவி கண்ணம்மாள் (50) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.