இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

கர்நாடக முதல்வர் சாமி தரிசனம்! வரிசையில் காத்திருந்த பக்தர்கள் காலணி வீச்சு!

கர்நாடக முதல்வர் சாமி தரிசனம் செய்தபோது வரிசையில் காத்திருந்த பக்தர்கள் காலணி வீசியதால் பரபரப்பு...

dk shivakumar

ஹாசனம்பா கோயிலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தரிசனம் - x

Updated On :

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த திரை மீது காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனம்பா கோயிலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அவரது மனைவியுடன் நேற்று தரிசனம் மேற்கொண்டார்.

அவரது வருகையையொட்டி, பொது தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு, அவர்கள் நிறுத்தப்பட்டனர்.

இதனால், பல மணிநேரங்களாக நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பெண்கள், கடும் ஆத்திரமடைந்தனர்.

கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில் முதல்வர் டி.கே. சிவகுமார் கோயிலின் கருவறைக்குள் அமர்ந்து தரிசனம் செய்து கொண்டிருந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சில பக்தர்கள், தங்களின் காலணிகளை கழற்றி, முதல்வரின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட எல்.இ.டி. திரை மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புகழ்பெற்ற ஹசனாம்பா கோயிலில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல் ஹசனாம்பா திருவிழா நடைபெற்று வருகின்றது. இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Karnataka Chief Minister visits temple; commotion ensues as devotees waiting in line throw footwear!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.