காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

ஆதாரமற்ற குற்றச்சாட்டு! தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக திறந்த கடிதம் எழுதிய 42 முன்னாள் நீதிபதிகள்!

ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக திறந்த கடிதம் எழுதியிருக்கும் 42 முன்னாள் நீதிபதிகள்

<P>07/03/2026 - KOCHI: Chief election commissioner Gynesh Kumar addressing the media during the election commision press conference at Kochi - Express

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - ENS

Published On :

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமற்றவை என்றுகூறி, உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42 நீதிபதிகள் கையெழுத்திட்டு திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் நிலையில், அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறியிருக்கும் முன்னாள் நீதிபதிகள், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை ஆதரமாற்றவை என்று சாடியதுடன் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

மேலும், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசைமைப்பு நிறுவனங்கள் மீது எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் தங்களுடைய கவலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அக். 7ஆம் தேதியிட்டு வெளியாகியிருக்கும் இந்த திறந்த கடிதத்தில், தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும், முன்னாள் நீதிபதிகள், இது குறித்து தங்களுடைய தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறைக்கு கு எதிராகவும், தேர்தல் செயல்பாடுகளில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த கடிதம் வெளியாகியிருக்கிறது.

அரசியலமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சிப்பது மக்களின் சட்டப்பூர்வமான ஜனநாயக உரிமை என்றாலும், வரம்பு மீறி, தனிநபர் தாக்குதல்கள், சட்டத்துக்கு எதிரானது என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு அரசியலமைப்பு நிறுவனம் அல்லது அதன் தலைவர்கள் மீது, பொது மேடைகளில் எதிர்க்கட்சியனரால் திருடர்கள், கைப்பாவைகள், சமரசத்துக்கு உள்ளானவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுவதாகவும் சரியல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER