99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்கு ராகுல் காந்தி தள்ளப்பட்டுள்ளதாக அனுராக் தாக்குர் விமர்சனம்...

அனுராக் தாக்குர் - ANI
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்கு ராகுல் காந்தி தள்ளப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் இன்று (அக். 12) விமர்சித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்றனர். இப்பேரணியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆதாரமற்ற அறிக்கைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி தேவையற்ற பதற்றத்தை நாட்டு மக்களிடையே உருவாக்கி வருவதாக அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். ஆனால், அவருக்கு உண்மை என்ன என்பது புரியவில்லை. நாட்டில் தேவையற்ற குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் இயல்பாகவே உள்ளது. வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசுபவர்.
எதிர்க்கட்சியினருக்கு சட்டங்கள் பற்றிய புதிதல் இல்லை; குழப்பம், நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆதாரமற்ற அறிக்கைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி தேவையற்ற பதற்றத்தை நாட்டு மக்களிடையே உருவாக்கி வருகிறது
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்கு ராகுல் காந்தி தள்ளப்பட்டுள்ளார்.
99 தேர்தல்களில் தோல்வியை சந்தித்தப் பிறகு இறுதியாக தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டி போராடி வருகிறார். சில நேரங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், சில நேரங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர், சில நேரங்களில் இன்னும் பலரை காரணங்களாகப் பேசுவார். அவர் தற்போது தரக்குறைவாகப் பேசி, வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏராளமான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்துவிட்டு பிறகு உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவார். இதுதான் அவரின் சாதனை'' என அனுராக் குறிப்பிட்டார்.
Summary
After losing 99 elections, it has become his habit to blame the Election Commission Anurag Thakur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


