காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி தர்னா! சமாஜவாதி இன்று பங்கேற்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணியின் போராட்டத்தில் சமாஜவாதி கட்சி பங்கேற்பு...

Samajwadi Party

அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி - கோப்புப் படம் | PTI

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தில் சமாஜவாதி கட்சி பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முறைக்கேட்டில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளால் நாடு முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 3 ஆவது நாளாக இன்றும் (அக்.8) ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தில்லியின் ராஜ பாதையில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி, சிவசேனை (உத்தவ் தாக்ரே அணி) மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை எனத் தொடர்ந்து இருநாள்களாக நடைபெற்ற போராட்டங்களில் சமாஜவாதி கட்சி பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இத்துடன், நேற்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Samajwadi Party has participated in the protest staged by INDIA bloc Members of Parliament against CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER