காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!

காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா போராட்டம் நடத்துவது பற்றி...

raj ghat rahul

காந்தி நினைவிடத்தில் கார்கே, ராகுல் காந்தி (கோப்புப்படம்) - ANI

Published On :

தில்லி ராஜ பாதையில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவா் பதவி விலகக்கோரி, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

”இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், காந்தி நினைவிடத்தில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தச் செல்கிறோம். பாஜக அரசுக்கும், குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும், தங்கள் நடவடிக்கைகள் நாட்டின் நலனுக்கு உகந்தவை அல்ல என்பதை உணர்வதற்கான தெளிவு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் அங்கு அமர்ந்து பிரார்த்திக்கப் போகிறோம்.

வாக்குத் திருட்டு விவகாரம், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என அனைத்தும் பொது நலனுக்கு எதிரானவையாகவே உள்ளன. அதனால் நாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக காந்தி நினைவிடத்திற்குச் செல்கிறோம்.

ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்கள் நமக்காகப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை அவர்கள் பறித்து வருவதையும், அதை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாங்கள் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் வரை பேரணி செல்ல முயன்ற எதிர்க்கட்சியினரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தது.

தொடர்ந்து, புதன்கிழமை ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தச் சென்ற எதிர்க்கட்சியினரை நடுவழியில் நிறுத்தி தில்லி காவல்துறை கைது செய்தது.

இந்த கைது நடவடிக்கைகளின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

INDIA bloc MPs stage a sit-in protest at the Gandhi memorial!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.