ஞானேஷ் குமாருக்கு எதிராக பிஹாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் போராட்டம்!
தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பிஹாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி போராட்டம்....
பிஹாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி போராட்டம்... - PTI video
தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணிக் கட்சிகள் தற்போது நடத்தும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் வருகிற அக். 10 ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதனிடையே பிஹாரிலும் தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தொடங்கியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையொட்டி பாட்னாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையை மீறி இந்தியா கூட்டணி கட்சியினர், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையின் வைக்கப்பட்ட தடுப்புகள் மீது தேஜஸ்வி யாதவ் ஏறிச் சென்று பேரணியைத் தொடர்ந்து வருகிறார்.
Summary
Protest led by Tejashwi Yadav in Bihar against Gyanesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


