11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..! யூடியூப் பிரபலம் நிஷா மீது போக்சோ வழக்கு!
யூடியூப் பிரபலம் நிஷா ரஃபேல் மீதான போக்சோ வழக்கு குறித்து...

நிஷா ரஃபேல் - படங்கள்: யூடியூப் / நிஷா ரஃபேல்
கேரள யூடியூப் பிரபலம் டாக்டர் நிஷா ரஃபேல் மீது மேற்கு திரிசூர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நிஷா ரஃபேல் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபில் 1.27 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ள டாக்டர் நிஷா உத்வேகம் அளிக்கும் பேச்சுகளால் கவனம் பெற்றார். கேரளத்தில் பொருளாதாரம் பாடப் பிரிவில் ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார்.
வித்தியாசமான கற்பித்தல் முறைகளுக்கும் உத்வேகம் அளிக்கும் பேச்சுக்காகவும் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றார். இன்ஸ்டாகிராமிலும் இவரது கணக்கினை 3.76 லட்சம் ஃபாலோயர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்த நிலையில், 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மேற்கு திரிசூர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷா ரஃபேல் தரப்பில் முற்றியிலும் பொய்யானதெனவும் கூறி வருகிறார்கள்.
காவல்துறை வழக்கினைப் பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விரைவில் கூடுதல் தகவல்களை அறிவிப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Sexual assault against 11-yr-old boy: Social media influencer Nisha Raphael booked in POCSO case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


