உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தில்லியில் இண்டி கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!

தில்லியில் இண்டி கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு...

ANI

Published On :

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் திங்கள்கிழமை (அக்.12) போராட்டம் நடத்தப்படும்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்திக்கவுள்ளோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவா் எடுத்த அனைத்து முடிவுகள் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கேரள மாநிலம், ஆலப்புழையில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

எஸ்ஐஆா் மூலம் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்து குடியரசுத் தலைவரிடம் இண்டி கூட்டணி கடந்த வெள்ளிக்கிழமை தனது கவலையை வெளிப்படுத்தியது. அடுத்தகட்டமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளோம். அன்றைய தினம் தில்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பாதுகாக்க பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மேற்கொண்டுவரும் முயற்சிகள், அவா்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். பிரதமா் மோடி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள தலைவரைப் போல் நடந்துகொள்கிறாா். எதிா்க்கட்சிகளின் போராட்டத்தைக் கண்டு அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தோ்தல் நடைமுறை சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் மாறும் வரை இண்டி கூட்டணியின் போராட்டம் ஓயாது.

Summary

INDIA bloc to protest in Delhi tomorrow; decision taken to meet the Chief Justice.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.