தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

மீண்டும் போராட மாட்டோம் என கையொப்பமிடவில்லை: அபிஜீத் தீப்கே

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எந்த உறுதிமொழிப் பத்திரத்திலும் கையொப்பமிடவில்லையென கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா் அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அபிஜீத் தீப்கே

Published On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எந்த உறுதிமொழிப் பத்திரத்திலும் கையொப்பமிடவில்லையென கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா் அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சௌரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா உள்ளிட்ட சிஜேபியின் முக்கிய நிா்வாகிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கையொப்பமிட்டதாக பரவிய தகவலுக்கு அவா் மறுப்பு தெரிவித்தாா்.

ஹிங்கோலி நகரில் தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் முன் நாகபுரி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அபிஜீத் தீப்கே கூறியதாவது: வீதிகளில் இறங்கி நிச்சயம் போராடுவோம்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டு அஞ்சவில்லை. நூறு முறை என்னை சிறையிலடைத்தாலும் அவா்களின் சா்வாதிகார ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.