காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற தலித் பெண் மீது தாக்குதல்! 5 பேர் மீது வழக்குப்பதிவு

ராஞ்சியில் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற தலித் பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப்படம்

Published On :

ராஞ்சியில் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற தலித் பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (அக். 13) தெரிவித்தனர்.

ராஞ்சியின் எச்.இ.சி ஸ்மார்ட் சிட்டி செக்டர் 2 பகுதியைச் சேர்ந்த மஞ்சு சௌதரி எனும் தலித் பெண் தங்கள் அண்டை வீட்டார் தன்னைத் தாக்கியதாகவும் ஜாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் மேலும், கிணற்றில் தண்ணீர் எடுக்ககூடாது என்று தடுத்து நிறுத்தியதாகவும் புகார் அளித்தார்.

மஞ்சுவின் புகார் அடிப்படையில் அமரேந்திர குமார், அவரது மனைவி ரேமி தேவி, அவர்களின் இரண்டு மகன்கள் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய 5 பேர் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்தக் கிணறு அமரேந்திர குமாரின் வீட்டு வளாகத்திற்குள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான புகார்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அந்தப் பெண் தங்களைத் தாக்கியதாக எதிர் தரப்பினரும் ஒரு புகாரை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Police stated on Tuesday (Oct. 13) that a case has been registered against five individuals involved in an attack on a Dalit woman who had gone to fetch water from a well in Ranchi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.