மார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

கடத்தல் எச்சரிக்கை! ஜெய்ப்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

ஜெய்ப்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது பற்றி...

Air India

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்

Published On :

ஜெர்மனியில் இருந்து தில்லி சென்ற விமானத்தின் விமானி, கடத்தல் முயற்சிக்கான எச்சரிக்கை குறியீட்டை அனுப்பியதைத் தொடர்ந்து, அந்த விமானம் ஜெய்ப்பூரில் இன்று அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.

ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து தில்லி விமானம் நிலையம் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், மும்பை வான் பரப்பில் இன்று காலை பறந்துகொண்டிருந்த போது, கடத்தல் முயற்சிக்கான ’ஸ்க்வாக் 7500’ என்ற சர்வதேச குறியீட்டை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தின் விமானி அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அந்த விமானத்தை அவசர தரையிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஜெய்ப்பூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு, காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உள்ளிட்டோர் விமானத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள், அவர்களின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், விமானத்தில் உள்ள பயணிகள் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்குவாக் 7500 என்றால் என்ன?

ஸ்குவாக் 7500 என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விமானப் போக்குவரத்து டிரான்ஸ்பாண்டர் குறியீடாகும். விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோதமாக யாரேனும் விமானத்தைக் கைப்பற்ற நினைத்தால் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியமாகத் தெரிவிக்க விமானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர்.

Summary

Hijack alert! Air India flight makes emergency landing in Jaipur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.