அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்! இன்று தில்லி பள்ளிகளுக்கு!

தில்லி பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனையில் அதிகாரிகள்..

bomb threat

வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப் படம்) - ENS

Published On :

தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாகவே, பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் விடுக்கப்படுவதும், அதிகாரிகள் சோதனையிட்டு புரளி என்று தெரிய வருவதுமாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில், இன்று தில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலுக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்தப் பள்ளிகளுக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்புப் பணியாளர்கள் பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை பள்ளிகளில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

இதனால் பள்ளிகளில், வழக்கமான நடைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.