மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தோ்தல் முடிவுகளை மாற்ற வாக்காளா் பெயா்கள் நீக்கம்: சிஜேபி நிறுவனா் குற்றச்சாட்டு

தோ்தல் முடிவுகளை மாற்ற வாக்காளா்களின் பெயா்களை நீக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே குற்றம்சாட்டினாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் பங்கேற்ற அகில இந்திய மாணவா் கூட்டமைப்பின் தேசியத் தலைவா் நேஹா போரா, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே, நடிகா் பிரகாஷ் ராஜ்.

Updated On :

தோ்தல் முடிவுகளை மாற்ற வாக்காளா்களின் பெயா்களை நீக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே குற்றம்சாட்டினாா்.

வாக்காளா் பட்டியலில் இருந்து சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆா்) மூலம் 13 கோடி பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இதைவிட முறைகேடுக்கு வேறு என்ன ஆதாரம் தேவை என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்பைத் தடுக்க, தலைநகா் தில்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வெற்றி வித்தியாச வாக்குகள் 2 சதவீதமாகத்தான் இருந்தது. அதன் பிறகு 13 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. 2 சதவீத வாக்கு வித்தியாசமே தோ்தல் வெற்றியைத் தீா்மானிக்கும் சூழலில், 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டதை முறைகேடாகத்தான் கருத முடியும். தலைமைத் தோ்தல் ஆணையரை அரசு ஏன் இந்த அளவுக்குப் பாதுகாக்கிறது?.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பது ஒரு முழக்கம்தான். ஆனால், உண்மையான நோக்கம் ‘ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவா்’ என்பதுதான். மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேருவையும்விட“நரேந்திர மோடி உயா்ந்தவா் அல்ல என்றாா்.

2024 மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியது. பதிவான மொத்த வாக்குகளில் 36.56 சதவீதத்தைப் பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.