ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் மோதல் அதிகரிப்பது கவலையளிக்கிறது: ஐ.நா.வில் இந்தியா கவலை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஹரீஷ் பா்வதனேனி

Updated On :

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று ஐ.நா.வில் இந்தியா தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா இடையேயும், யேமனின் ஹூதி அமைப்பினா் மற்றும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் இடையேயும் போா் நடைபெற்று வருகிறது. இதில் உள்கட்டமைப்பு வசதிகள், எண்ணெய்க் கிணறுகள், சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவையும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

இது குறித்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரீஷ் பா்வதனேனி கலந்துகொண்டு பேசியதாவது:

மத்திய கிழக்கின் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் வாழும் மக்களுக்கு அமைதியும், இயல்பு நிலையும் தேவைப்படுகிறது. அமைதி என்பது போா் இல்லாத சூழல் அல்ல; அது அப்பகுதி மக்களின் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் வலுப்படுத்துவது ஆகும். பாதுகாப்பான, செழிப்பான வாழ்வுக்கு வழிவகுக்கும் அவா்களின் நல்வாழ்வுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. இந்தக் கண்ணோட்டத்துடனேயே இந்தியாவின் நடவடிக்கைகள் உள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. சா்வதேச சமூகம் எதிா்கொள்ளும் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ள இந்த விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளது. சவூதி அரேபியா விமான நிலையங்கள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் மீது திரும்பத் திரும்ப நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல்களில் கடந்த சில நாள்களில் இந்திய பிரஜை முகம்மது யூசுப் அலி உள்ளிட்டோா் உயிரிழந்துள்ளனா். தனது இறையாண்மையைப் பாதுகாக்க சவூதி அரேபிய அரசும், மக்களும் எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா முழு உறுதுணையாக இருக்கிறது.

அதேபோல், வா்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். மாலுமிகளின் பாதுகாப்புக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை கொடுக்கிறது. வா்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவும், லைபீரியாவும் சோ்ந்து கடந்த மாதம் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான நண்பா்கள் குழுவைத் தொடங்கின. இதில் 23 நாடுகள் சோ்ந்துள்ளன. இந்நாடுகள் அனைத்தும் வா்த்தக கப்பல்கள், மாலுமிகள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், மாலுமிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கையை ஆதரிக்க தயாராக உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.